பொழுதுபோக்கு

அமரன் ரிலீஸ் தேதி எப்போனு தெரியுமா? சூப்பர் நியுஸ் அவுட்

சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் பாண்டிராஜ். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் தனுஷின் 3 படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்திருந்தார். தொடர்ந்து காமெடியான ஜனரஞ்சகமான படங்களில் நடித்துவந்த சிவகார்த்திகேயன் அதன் பின்னர் கொஞ்சம் சீரியஸான படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது சிவகார்த்திகேயன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் பாடல்கள் எழுதுவது, பாடல்கள் பாடுவது மற்றும் படங்கள் தயாரிப்பதிலும் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகின்றார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக தயாராக உள்ள திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கின்றார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி ராகுல் சிங் மற்றும் ஷிவ் ஆரூர் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பிராய்லர்ஸ்: ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமரன் படத்தினை வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் எனவும் கூறப்படுகின்றது.

இதை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படத்தில் நடித்து வருகிறார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content