அல்லு அர்ஜுன் பெயரை மாற்றுகிறாரா?

அல்லு அர்ஜுன் என்றாலே தற்போது எல்லோருக்கும் புஷ்பா படம் தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அவரது புஷ்பா 2 படம் கடந்த வருடம் டிசம்பரில் ரிலீஸ் ஆகி வெறும் 6 நாட்களில் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதன் முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் அவரது பெயரை நியூமராலஜி அடிப்படையில் மாற்றிக்கொள்ள போகிறார் என செய்தி வெளியாகி இருக்கிறது.
அவரது பெயரில் இரண்டு U மற்றும் இரண்டு N ஆகியவற்றை அவர் சேர்த்துக்கொள்ள போகிறாராம். இப்படி பல நடிகர்கள் தங்களின் பெயர்களின் எழுத்துக்களை மாற்றி இருக்கின்றனர்.
அந்த லிஸ்டில் அல்லு அர்ஜுனும் தற்போது இணைகிறார். இருப்பினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
(Visited 2 times, 1 visits today)