அஜித்தின் கையை கிழித்த ரசிகன்! 29 முறை அறுவை சிகிச்சை…. நீண்ட நாட்களுக்குப்பின் தல
கோலிவுட்டில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் அஜித் குமாரும் ஒருவர். சிவாஜி – எம்.ஜி.ஆர் இவர்களுக்கு ஒரு இடம் உண்டு.
இவர்களை அடுத்து தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுபவர்கள் ரஜினி – கமல்.
அடுத்ததாக இளைய தலைமுறைகளுக்கு விஜய் – அஜித் அவர்கள் தான்.
இதில் அஜித் வித்தியாசமானவர். இவர் மற்ற நடிகர்களைப் போல் பட விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார், ஆடியோ லாஞ்ச், பட புரமோஷன்கள் என எதிலும் பங்கேற்க மாட்டார்.
ஆனாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அவரின் குணம் தான்.
தன்னுடைய ரசிகர்கள் என்ன அடாவடி செய்தாலும் கண்டுகொள்ளாத நடிகர்களுக்கு மத்தியில், தன்னுடைய ரசிகன் என்றால் அவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என விரும்புபவர் அஜித். தன் ரசிகர்கள் ஏதேனும் தவறு செய்தால் அந்த இடத்திலேயே தட்டிக் கேட்பார்.

நடிகர் அஜித் பேட்டிகள் கொடுப்பதையும் பல வருடங்களாக தவிர்த்து வந்தார். ஆனால் அண்மையில் கார் ரேஸில் களமிறங்கிய பின்னர், அந்த விளையாட்டை ஊக்கப்படுத்த முடிவெடுத்து வெளிநாட்டு சேனல்கள் சிலவற்றிற்கு பேட்டிகள் அளித்திருந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மனம் விட்டு பேசி இருக்கிறார் அஜித். தன் கையில் நிறைய காயங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அஜித், கடந்த 2005-ம் ஆண்டு நடந்த ஒரு கசப்பான சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
அந்த சமயத்தில் நான் வெளியே சென்றிருந்தபோது ரசிகர்கள் என்னைப் பார்த்ததும், குவிந்துவிட்டார்கள். அவர்கள் என்னிடம் கைகொடுப்பதற்காக கையை நீட்டினார்கள். நானும் கை கொடுத்துவிட்டு, பின்னர் காரில் ஏறிய பின்னர் தான் என் கையில் இருந்து இரத்தம் வழிவதை பார்த்தேன். அப்போதுதான் கூட்டத்தில் யாரோ ஒருவர் என் கையை பிளேடால் கீறி இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. அந்த தழும்பு என் கையில் இன்னும் இருக்கிறது என தன் கையைக் காட்டி, வலியுடன் பேசி இருக்கிறார் அஜித்.
அதேபோல் தான் அடிக்கடி விபத்தில் சிக்குவது பற்றி பேசி உள்ள அவர், கார் ரேஸிங் செய்பவர்கள், விபத்தில் சிக்குவது வழக்கம் தான், நான் ஒரு நடிகன் என்பதால் அது வெளியில் தெரிகிறது. இதுவரை விபத்தில் சிக்கி நான் 29 முறை அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன்.
இத்தனை காயங்கள் வந்தும் ஒருமுறை கூட என் மனதில் இந்த ரேஸிங்கை விட்டுவிடலாம் என்கிற எண்ணம் தோன்றியதே இல்லை. ஒவ்வொரு முறை விபத்தில் சிக்கும் போதும் அதில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டு, அதில் இருந்து கடந்து செல்ல வேண்டும்.
அதைத் தான் இத்தனை ஆண்டுகளாக செய்து வருகிறேன் என அஜித் கூறி உள்ளார். அவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.இவர்கள் இந்த வாரம் உள்ளே செல்வார்கள் என்றும், இதன் மூலம் பிக்பாஸில் வீட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் பொருத்திருந்து பார்க்கலாம் என்றார்.






