ஸ்பெயினில் நடந்த கார் பந்தயத்தில் 3ஆம் இடம் பிடித்த அஜித் அணி
ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணி 3 ஆம் பிடித்துள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது அஜித் குமார் ரேஸிங் அணி சில மாதங்களுக்கு முன் துபையில் நடந்த கார் பந்தயத்தில் முதல்முறையாகக் கலந்துகொண்டு 3 ஆம் இடம் பிடித்து அசத்தியது.
தொடர்ந்து, பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெற்ற கார் பந்தயங்களில் போட்டியிட்டார்.
இந்த நிலையில், நேற்று ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H சீரியஸில் கன்ஸ்ட்ரக்டர் சாம்பியன்ஸ் (constructor champions) பிரிவில் கலந்துகொண்ட அஜித் குமார் அணியினர் 3 ஆம் இடம் பிடித்து அசத்தினர்.

(Visited 4 times, 1 visits today)





