Fast & Furiousன் அடுத்த பாகத்தில் அஜித்? மாஸ் தகவல்

சினிமாவை தாண்டி நடிகர் அஜித் கார் ரேஸ் பைத்தியமாக உள்ளார். சினிமாவில் அறிமுகமானாலும் ரேஸில் கவனம் செலுத்தியவர் பின் நேர்ந்த விபத்தால் அந்த பக்கம் செல்லாமல் இருந்தார்.
அடுத்தடுத்து அஜித் நடிப்பில் நல்ல படங்கள் வெளியாகின. இந்த வருட ஆரம்பத்தில் இருந்து அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது.
கடந்த சில வருடங்களாகவே மீண்டும் கார் ரேஸில் களமிறங்க ஆசைப்பட்ட அஜித் அதற்கான விஷயங்களை படங்கள் நடிப்பதோடு சேர்த்து செய்து வந்தார்.
அடுத்தடுத்து கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிக்கண்டு வருபவரிடம் சமீபத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதாவது F1 படத்தில் பிராட் பிட் நடித்ததை போல 24H சீரிஸ் குறித்த படத்தில் நீங்கள் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட அதற்கு அஜித், Fast and Furious, F1 போன்ற படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார்.