உலகம்

அகமதாபாத் விமான விபத்து – நிபந்தனையுடன் இழப்பீடு வழங்க முன்வந்த விமான நிறுவனம்!

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு  கூடுதல் பண இழப்பீடுகளை வழங்குவதாக ஏர் இந்தியா  அறிவித்துள்ளது.

இந்த சலுகையின் மூலம் குடும்பங்கள் இழப்பீட்டு ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், விமான நிறுவனம் மற்றும் போயிங் மீது வழக்குத் தொடரும் உரிமையை நிரந்தரமாக விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

242 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணத்த  ஒருவர் மாத்திரமே உயிர் பிழைத்த நிலையில், மருத்து கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 19 பேர் உயிரிழந்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடும் வழக்கறிஞர்கள், ஆவணத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

விமான நிறுவனம் மற்றும் உற்பத்தியாளர் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களில் பல வழக்குகளை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!