பெரும் வரவேற்பை பெற்ற ஜீவாவின் ‘அகத்தியா’ பட டீசர்…
ஹாரர் த்ரில்லர் படமான ‘அகத்தியா’ வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘அகத்தியா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜீவாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது ‘பிளாக்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடித்துள்ளார். உலக அளவில் பிரபலமான ‘ஏஞ்சல்ஸ் vs டெவில்’ கதைக்கருவுடன் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘அகத்தியா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இதன் ட்ரெய்லர் வெளியாகி தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
(Visited 2 times, 1 visits today)