ஹீரோவுக்கு துரோகம் செய்த நடிகை… பிரேக்கப்புக்கு இதுதான் காரணமா.?

நடிகை ஒருவர் தொடர்ந்து காதல் பிரேக்கப் ஆல் அப்செட்டாகி விட்டார். ஆரம்பத்தில் இவரது காதல் தோல்விக்கு காரணம் ஹீரோதான் என்று பேசப்பட்டது. அதாவது இளம் நடிகை ஒருவருடன் ஹீரோ பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தை நடிகைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் நடிகைக்கு இந்த விஷயம் தெரிய வந்து பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர் என்று கூறினர்.
ஆனால் இப்போது சங்கதியே வேறு என காற்றுவாக்கில் செய்தி வந்துள்ளது. அதாவது நடிகை தான் வேறு ஒரு நபருடன் பழகி வந்திருக்கிறார்.
அதோடு நடிகரிடம் கையும் களவுமாக நடிகை சிக்கி உள்ளார். இதனால் நடிகர் அதிர்ச்சியை அடைந்துள்ளார்.
நடிகை நம்பிக்கை துரோகம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்துள்ளார் ஹீரோ. அதன் பிறகு இனி உன் சங்கார்த்தமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு நடையை கட்டி விட்டாராம்.
அரசனை நம்பி புருஷனை இழந்த கதையாக இன்னொரு நடிகருடன் தவறான உறவு வைத்துக் கொண்டதால் இப்போது நடிகையின் திருமணம் வரை சென்ற காதல் நின்று போய்விட்டது. தப்பு செய்து விட்டோமே என்று நடிகை புலம்பி கொண்டிருக்கிறாராம்.
நடிகையின் வாழ்க்கையில் காதல் தோல்வி ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் இந்த காதல் திருமணத்தில் கைகூடும் என அவரது ரசிகர்கள் வரை எதிர்பார்த்த நிலையில் இப்போது நடிகர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.