தலையில் குல்லாவுடன் இஃப்தார் நோம்பில் தளபதி விஜய்… ஹாட் போட்டோஸ்`

தளபதி விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில், இன்று தவெக கட்சி சார்பில் நடத்தப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், தலையில் குல்லா அணிந்து பங்கேற்றார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தவெக கட்சியின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழா சென்னை ராயப்பேட்டை ஓஎம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 3000 திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட நிலையில். அவர்களுக்காக தவெக கட்சியின் சார்பில் பிரம்மாண்ட விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்பவர்களுக்கு தவெக சார்பில் மட்டன் பிரியாணி, நோன்பு கஞ்சி, சிக்கன் 65, போன்ற உணவுகள் பரிமாறப்பட்டன.
இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், தளபதி விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இதில் விஜய் தலையில் குல்லா உடனும், வெள்ளை நிற வேஷ்டி அணிந்து கலந்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.