ஜனநாயகன் படத்தின் கதை இதுதான்… லேட்டஸ்ட் தகவல்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி திரைப்படமாகும். இப்படத்தை முடித்த கையோடு முழுமையாக அரசியலில் ஈடுபடவுள்ளார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ருதி ஹாசன் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜனநாயகன் ஒரு அரசியல் படம் என்பது படத்தின் டைட்டில் போஸ்டரை பார்க்கும்போதே தெரிகிறது. முதலில் இப்படம் ஒரு கமர்ஷியல் படமாக தான் இருக்கும் என தகவல் வெளிவந்தது. ஆனால், தற்போது டைட்டில் போஸ்டரை பார்க்கும்போது முழுக்க முழுக்க அரசியல் படம் எனா தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் வாக்குகள் என்பது எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் ஜனநாயகன் படம் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் படத்தின் கதைக்களமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் அவருக்கான புரட்சிரமான வசனங்களை இப்படத்தில் எழுதி இருக்கிறாராம் இயக்குநர் ஹெச். வினோத். அந்த பன்ச் வசனங்கள் அனைத்தும் தீயாய் இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.
ஆனால், இவை அனைத்தும் சொல்லப்படும் தகவல் தானே தவிர உறுதியான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.