அரசியல் இலங்கை செய்தி

வலுவான எதிரணி மலரும்: ஐதேக நம்பிக்கை

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்த பின்னர் வலுவானதொரு கூட்டு எதிரணியைக் கட்டியெழுப்ப முடியும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன Ruwan Wijewardena தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. அது சாதகமான திசையை நோக்கி பயணிக்கின்றது. சிறந்த பிரதிபலன் கிடைக்கும் என நம்புகின்றோம்.

கிராம மட்டங்களில் பிளவுபட்டிருக்கும் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என கோரிவருகின்றனர்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்குரிய சூழ்நிலை உள்ளது.

நாம் இரு தரப்பும் இணைந்த பின்னர் வலுவானதொரு பொது எதிரணியைக் கட்டியெழுப்ப முடியும்.” – என்றார் ருவான் விஜேவர்தன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!