சூரிய மண்டலத்தின் 06 கிரகங்கள் ஒரே நேரத்தில் தோன்றும் சிறப்பு வானியல் நிகழ்வு!
இந்த மாதம் வானில் 06 கிரக அமைப்புகள் ஒரே வரிசையில் நிலைபெறும் அற்புத நிகழ்வு இடம்பெறும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி , புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் அனைத்தும் வானத்தின் ஒரே பகுதியில் நிலைநிறுத்தப்படும்.
சில கிரகங்கள் நிர்வாணக் கண்ணுக்குத் தெரியும் எனக் கூறப்படும் அதேவேளை ஏனையவற்றை தொலைநோக்கி மூலம் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பினால் ஒரு ஒளி உருவாகும் எனவும், இது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
People.com வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் நாட்களில் இந்த சீரமைப்பு வெளிப்படும், ஒரு குறிப்பிட்ட மாலை தெளிவான காட்சியை வழங்கும் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம் இம்மாத்தத்தின் 28 ஆம் திகதி இந்த அமைப்பை பார்க்க முடியும் என நாசா கூறியுள்ளது.





