இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்!
இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற ATR 42-500 விமானம் காணாமல் போனதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மக்காசர் நகருக்கு அருகே விமானம் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படுகிறது.
காணாமல் போன விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.





