ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் – விடாப்பிடியாய் நிற்கும் ட்ரம்ப்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், தெஹ்ரான் ஒப்பந்தம் ஒன்றை எட்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் ‘பிராந்தியப் போரை’த் தூண்டும் என்று அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) எச்சரித்துள்ள நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
முன்னர் இராணுவத் தலையீடு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், ஈரானுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து ட்ரம்ப் இன்னும் ‘இறுதி முடிவை’ எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்திவிட்டு, அணு ஆயுதங்களைத் தவிர்த்து ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு ட்ரம்ப் மீளவும் தெஹ்ரானை வலியுறுத்தியுள்ளார்.





