தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெல்போர்னில் தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
UL 605 விமானம் என்ற விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
மெல்போர்னிலிருந்து கொழும்பு நோக்கி வந்த விமானத்தில் சிறிது நேரத்தில் கோளாறு ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)





