இலங்கையில் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி!

பணமோசடியின் கீழ் வரி ஏய்ப்பைக் குற்றமாக மாற்றுவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
அதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இது தொடர்பான திருத்தங்கள் ஏற்கனவே சட்டத்தின் வரைவோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதன் கீழ், வரி செலுத்தத் தவறியவர்கள் தொடர்பில் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் மூலம் குற்றம் இழைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், சட்டமா அதிபர் ஊடாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)