பொழுதுபோக்கு

மக்களின் கண்ணீருடன் 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் நல்லடக்கம்…

நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த்தின் இல்லம், தேமுதிக., அலுவலகம் மற்றும் தீவுத்திடலில் வைக்கப்பட்ட அவரது உடலு்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தினர்.

லட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக., தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

வழிநெடுகிலும் தொண்டர்களும், ரசிகர்களும் வெள்ளம்போல் அவருக்கு மரியாதை செலுத்தினர். கோயம்பேடில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்தனர். சந்தனபேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இறுதி சடங்கில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், அலுவலகம் முன்பு கூடியிருந்த கூட்டத்தினர் கண்ணீர் மல்க விஜயகாந்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.

வானத்தை போல மனம் படைத்த விஜயகாந்த் தேடி வந்தவர்களின் பசியை போக்கி, ஏழை மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்த இந்த சொக்க தங்கத்திற்கு நிச்சயம் சொர்க்கத்தில் இடம் இருக்கும். அப்படியே மக்கள் மனதிலும் நிலைத்து நிற்பார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!