இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!
இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 1467 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 460 கிராம் ஹெரோயின், 653 கிராம் ஐஸ் போதைப்பொருள், 03 கிலோ 637 கிராம் கஞ்சா, 103,793 கஞ்சா செடிகள், 342 கிராம் மாவா மற்றும் 562 மாத்திரைகள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
56 சந்தேக நபர்கள் தொடர்பான அழைப்பாணையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் போதைக்கு அடிமையான 51 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 164 சந்தேகநபர்கள் இன்றைய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, “நீதி” நடவடிக்கையின் போது வீடுகளை விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தொடர் விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.