தைவானை சீனாவில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது -ஷீ ஜின்பிங்

தைவானை சீனாவில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது என அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் முன்னாள் தலைவர் மாவோ சேதுங்கின் 130வது பிறந்தநாளை நினைவுகூரும் கருத்தரங்கில், கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தாய்நாடு “மீண்டும் இணைக்கப்பட வேண்டும், தவிர்க்க முடியாமல் மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2025 அல்லது 2027 இல் தைவானைக் கைப்பற்ற ஷி திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைவர்களின் பொதுக் கணிப்புகளையும் சீனத் தலைவர் குறிப்பிட்டார்,
(Visited 10 times, 1 visits today)