பொழுதுபோக்கு

பிக்பாஸ் அக்ரீமெண்ட் .. எல்லா உண்மைகளையும் போட்டுடைத்த டேனியல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களிடம் நிகழ்ச்சி குழு எந்த மாதிரியான அக்ரீமெண்ட்டை போடும் என டேனியல் ஓபனாக பேசியிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது களைகட்ட தொடங்கியிருக்கிறது. முதலில் 18 பேர் பிறகு வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் 5 பேர் என மொத்தம் 23 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் பவா செல்லதுரை தானாகவே வெளியேற; அனன்யா, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு ஆகியோ எவிக்ட் செய்யப்பட பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த சீசனின் டஃப் போட்டியாளராக கருதப்பட்டவர் பிரதீப் ஆண்டனி. அவர்தான் டைட்டில் வின்னராவார் என்ற கருத்தும் இருந்தது. ஆனால் அவர் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி வெளியேற்றப்பட்டார். இது கடும் சர்ச்சையையும், விமர்சனத்தையும் பிக்பாஸுக்கும், கமல் ஹாசனுக்கும் பெற்றுக்கொடுத்தது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்ட நடிகர் டேனியல் இந்த விவகாரம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

“பிரதீப்பை வெளியே அனுப்பியது நியாயமே இல்லை. எங்கள் சீசனில் மகத்துக்கு ரெட் கார்டு கொடுத்தார்கள். ஆனால் மகத் நல்ல மனிதர். இந்த சீசனில் பிரதீப்பைவிட மோசமானவர்கள் வீட்டுக்குள் இன்னமும் இருக்கிறார்கள்.

விசித்திரா உடைத்துவிட்டார்: பிரதீப் மீது எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனால் இந்த வாரத்தில் கமல் ஹாசனிடம் விசித்திரா பேசும்போது பிரதீப்புக்கு சப்போர்ட் செய்யலாம் என்ற முடிவை எடுத்துவிட்டேன். கமல் ஹாசன் பேசும்போது அந்த செட்டில் இருப்பவர்கள் எல்லாம் நிகழ்ச்சி குழுவால் செட்டப் செய்யப்பட்டவர்கள். அதைத்தான் மக்கள் கருத்தாக வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் நினைத்துக்கொள்கின்றனர். அது தவறு.

ஒரு டீமாக ஃபார்ம் பண்னித்தான் பிரதீப்பை வெளியேற்றினார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நரிகள் எல்லாம் சேர்ந்தால் சிங்கத்தையே வேட்டையாடிவிடும் என்று சொல்வார்கள். அதுபோல்தான் இதிலும். அதனால், Bully கேங்கை நான் நரிக்கூட்டமாக பார்க்கிறேன். பிரதீப்பை கண்டிப்பாக நான் சிங்கமாகத்தான் பார்க்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சி குழு அவர்களுக்கு சாதகமாகத்தான் அக்ரீமெண்ட்டை போடுவார்கள். இதில் சட்ட ரீதியாக ஒன்றுமே செய்ய முடியாது. இந்த நிகழ்ச்சி முடியும் வரை போட்டியாளர்கள் யாரும் பேட்டி கொடுக்கக்கூடாது. அப்படியே கொடுத்தாலும் அவர்கள் சொல்வதைத்தான் பேட்டியில் சொல்ல வேண்டும். இதுவும் அந்த அக்ரீமெண்ட்டில் இருக்கும். மீறி செய்தால் நம் மீது அவர்கள்தான் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.

அதேபோல் அவர்களுக்கு தேவை என்றால் அந்த அக்ரீமெண்ட்டை மாற்றிக்கொள்வார்கள். நாங்கள் உள்ளே போகும்போது எங்களிடம், நீங்கள் இந்த முறை கலந்துகொண்டால் பிக்பாஸ் வேறு எந்த மொழியில் நடந்தாலும் அதில் கலந்துகொள்ள முடியாது என்று அக்ரீமெண்ட்ட்டில் சொன்னார்கள். ஆனால் பிந்து மாதவி இங்கும் கலந்துகொண்டு தெலுங்கில் சென்று டைட்டில் வின்னராகவும் ஆனார்.

இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை கண்டெண்ட் கொடுப்பவர்களை உடனே வெளியேற்றமாட்டார்கள். அவர்களிடம் எவ்வளவு கண்டெண்ட் வாங்க முடியுமோ வாங்கிவிட்டு அனுப்புவார்கள். உதாரணமாக இப்போது மாயா கேங்கை எடுத்துக்கொண்டால் மாயாவை கமல் ஹாசன் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். ஆனால் பேசவில்லை. அதேபோல் அந்த கேங்கில் இருக்கும் பிசிறான ஐஷுவை வெளியே அனுப்பினார்கள்” என்றார்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்