மண்சரிவில் புதையுண்டு காணாமல் போயிருந்த நான்கு பேர் சடலமாக மீட்பு

பலாங்கொடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மண்சரிவில் வீடொன்று புதையுண்டு காணாமல் போயிருந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் வீடொன்று மண்சரிவில் புதையுண்டதில் திருமணமான தம்பதியரும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல் போனதாகக் கூறப்படும் நான்கு பேரின் சடலங்களும் தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது,
அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், இலங்கை இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
(Visited 11 times, 1 visits today)