125,000 ஆண்டுகளில் முதல் முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்
உலகில் 125,000 ஆண்டுகளில் ஆக வெப்பமான ஆண்டாக இவ்வாண்டு இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விஞ்ஞானிகள் இதனை கூறியுள்ளனர். கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவில் வெப்பமான ஒக்டோபராக அமைந்துள்ளது.
இதற்கு முன் 2019ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் ஆக வெப்பமான ஒக்டோபராக இருந்தது. அதை விடவும் கடந்த மாதத்தின் வெப்பநிலை 0.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
இவ்வாண்டின் செப்டம்பர் மாதமும் ஆக வெப்பமான செப்டம்பர் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
வெப்பவாயுக்களின் வெளியேற்றத்தாலும் El Nino பருவநிலை நிகழ்வாலும் வெப்பம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பருவநிலை மாற்றத்தால் இது புதிய இயல்பாக ஆகிவிட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறினர்.
(Visited 9 times, 1 visits today)