காசாவிற்கான உதவிகளை தொடர்ந்து வழங்குவோம் : பிளிங்கன் உறுதி!

காசாவில் உள்ள பொதுமக்களுக்குச் சென்றடையும் உதவித் தொகையை விரிவுபடுத்துவதற்கு வாஷிங்டன் “மிகவும் ஆக்ரோஷமாக” செயல்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.
துருக்கிய வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடானுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நான் சொன்னது போல், காசாவில் அதிக மனிதாபிமான உதவிகளைப் பெறுவதில் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாக வேலை செய்கிறோம், அதைச் செய்வதற்கான உறுதியான வழிகள் எங்களிடம் உள்ளன என்று கூறினார்.
(Visited 7 times, 1 visits today)