விண்வெளியில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் – ஆய்வில் வெளியான தகவல்
விண்வெளி நிலையத்தில் எலிகளின் கருமுட்டைகள் முதல்முறையாக வளர்க்கப்பட்டதாக ஜப்பானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு மூலம் மனிதர்களாலும் விண்வெளியில் இனப்பெருக்கம் செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகள், உறைந்த எலிகளின் கருமுட்டைகளை 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விண்ணுக்கு அனுப்பி வைத்தனர். 4 நாள்களுக்குக் கருமுட்டைகளை விண்வெளி நிலையத்தில் வளர்த்தனர்.
புவியீர்ப்பு இனப்பெருக்கத்தைப் பாதிக்காது என்று அந்த ஆய்வு காட்டுவதாக ஆய்விதழில் குறிப்பிடப்பட்டது.
எலிகளின் மரபணுக்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பூமியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்தது.
யமனாஷி பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களுடன் சேர்ந்து ஜப்பானின் விண்வெளி நிலையம் ஆய்வை நடத்தியது.
(Visited 6 times, 1 visits today)