பயங்கரமான பேரழிவு : காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து புட்டின் கருத்து!

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்ற காசா மருத்துவமனை மீதான தாக்குதல் ஒரு பயங்கரமான பேரழிவு என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று (10.18) தெரிவித்துள்ளார்.
இந் தாக்குதலானது மோதலுக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்பதைக் வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சீன அதிபர் சி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
“இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கான சமிக்ஞையாக இது இருக்கும் என்று நான் நம்புவதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், சில தொடர்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் புட்டின் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)