ஜெர்மனியில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் – அகதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஐரோப்பா ரீதியில் பொதுவான கடுமையான சூழ் சட்டம் ஒன்றை அதாவது அகதி சட்டம் ஒன்றை அமுல்படுத்தி ஜெர்மன் அரசாங்கமானது இதுவரை காலங்களும் கூட்டு கட்சிகளுடைய விசனங்களால் தாமதமாகி இருந்தது.
இந்த நிலையில் ஐரோப்பா ரீதியாக அகதிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜெர்மனி நாடு தற்பொழுது உடன்பாட்டை தெரிவித்து வருகின்றது.
இது தற்பொழுது ஜெர்மன் அதிபர் ஓலா சொல்ஸ் அவர்களுடைய செயற்பாட்டின் காரணமாக தற்பொழுது ஐரோப்பாவிற்கான பொதுவான கடுமையான அகதி சட்டம் ஒன்று உருவாகுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடைய உள் ஊர் ஆட்சி அமைச்சர்கள் இந்த புதிய கடுமையான அகதி சட்டத்துக்கு தமது ஆதரவுகளை வழங்கி இருந்தாலும்,
ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சியுடைய பங்காளி பசுமை கட்சியானது இந்த புதிய சட்டத்தின் உள்ளடக்கத்துக்கு எதிரான மற்றும் வன்மையான கண்டனத்தை தெரிவித்து இருந்தார்கள்.
தற்பொழுது ஜெர்மனியுடைய வெளிநாட்டு அமைச்சர் அனலென்னா பேர்பொக் அவர்களுடைய ஆதரவினாலும் பசுமை கட்சியானது தமது எதிர்ப்பை கைவிட்டுள்ள நிலையில் வெகுவிரைவில் ஐரோப்பாவிற்கான அகதி சட்டம் அமுலுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ளதாக ஸ்பானிய உள் ஊர் ஆட்சி அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார்.
இந்நிலையில் ஜெர்மனியில் இதுவரை காலமும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட அகதிகளும் வந்து இருந்த நிலையில் பல ஜெர்மனியர்கள் அகதிகளின் அதிகரிப்பிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
64 வீதமான ஜெர்மனியர்கள் அகதிகள் பெருமளவில் தமது நாட்டுக்கு வருவதை தாம் விரும்பவில்லை என்று கருத்து கணிப்பில் தெரிவித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.