உக்ரைனுக்கு ATACMS நீண்ட தூர ஏவுகணை வழங்க அமெரிக்கா திட்டம்
உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகத்தை உக்ரைனிய ஏவுகணை தாக்கியுள்ளது.இது தொடர்பாக BBC செய்தி நிறுவனத்திடம் உக்ரைனிய அதிகாரிகள் வழங்கிய தகவலில், ஸ்ட்ரோம் ஷடோ ஏவுகணைகளை(Storm Shadow missiles) கொண்டு செவாஸ்டோபோல் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்ட்ரோம் ஷடோ ஏவுகணைகள் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளிடம் இருந்து பெறப்பட்டது எனவும் தெரிவித்தனர். இந்த வகை ஏவுகணைகள் கிட்டத்தட்ட 150 மைல் தொலைவு வரை உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை.ஜெலென்ஸ்கியின் அமெரிக்க வருகையை முன்னிட்டு ஜோ பைடன் உக்ரைனுக்கான புதிய ராணுவ உதவி தொகுப்பை அறிவித்தார்.
இந்நிலையில் உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய ATACMS ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.அதில் 300 கி.மீ தொலைவு வரை தாக்கி அழிக்க கூடிய திறன் கொண்ட ATACMS ஏவுகணைகள் சிலவற்றை உக்ரைன் பெறலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.