ஜோகன்னஸ்பர்க் தீவிபத்து!! பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீயினால் 05 மாடிகளைக் கொண்ட இந்த வீட்டுத் தொகுதி முற்றாக எரிந்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் இன்னும் துல்லியமாக கண்டறியப்படவில்லை.
என்றாலும், தென்னாப்பிரிக்காவில் மின் இணைப்பு இல்லாதவர்கள் மெழுகுவர்த்தி மற்றும் பிற வழிகளில் வெளிச்சம் கொடுக்கச் செல்லும் போது இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)