‘தனி ஒருவன் 2’… இன்று மாலை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘தனி ஒருவன்’. ஜெயம் ரவி மற்றும் அரவிந்தசாமி இணைந்து கலக்கிய அந்த படத்தை மோகன்ராஜா இயக்கியிருந்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை குவித்தது.
இந்த படத்தில் ஹீரோவிற்கு நிகரான கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். சித்தார்த் அபிமன்யூ என்ற அந்த கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த கலக்கல் கூட்டணிக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் மாஸ் ஹிட்டிற்கு பிறகு 9 ஆண்டுகளை கழித்து இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)