பொழுதுபோக்கு

பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய பூமிகா…

தமிழ் சினிமாவில் ‛ரோஜாக்கூட்டம்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை பூமிகா சாவ்லா. அதை தொடர்ந்து விஜய்யுடன் பத்ரி, சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.

திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலம் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த பூமிகா சமீப காலமாக செலெக்ட்டிவ்வான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதயநிதி நடிப்பில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது தனது 45வது வயதில் அடி எடுத்து வைத்துள்ள பூமிகா தனது பிறந்தநாளை காது கேளாத மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

இந்த நிகழ்வில் அவர்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களை மகிழ்வித்ததுடன் பல குழந்தைகளுக்கு ஹியரிங் எய்ட் மெஷினும் வாங்கிக் கொடுத்துள்ளார். இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளார் பூமிகா.

மேலும், “இது போன்ற விஷயங்களை நான் பொதுவெளியில் எப்போதும் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. ஆனால் என்னை பின்தொடர்புகளில் சிலருக்கு இதுபோன்று நல்ல விஷயங்களை செய்வதற்கு ஊக்கமாக அமையும் என்பதற்காக இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். ஆண்டவன் நமக்கு நல்ல வாழ்க்கையையும் பிறருக்கு நல்லது செய்து அவர்கள் முகத்தை சந்தோசத்தை வரவழைக்கும் மனதையும் கொடுத்துள்ளார். இது உண்மையிலேயே எனது பிறந்த நாளை மகிழ்ச்சிகரமாக மாற்றியது” என்று கூறியுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்