பரிசுகள் மற்றும் பொருட்களுக்காக பணம் அனுப்புபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை
சமூக ஊடக கணக்குகள் மூலம் தனிநபர்களுக்கு பொருட்கள் மற்றும் பரிசுகளை பெற்றுக்கொள்ள தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்ற வேண்டாம் என்று பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
சமூக ஊடக மோசடி செய்பவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்கப் பேச்சாளரும், மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சுதத்த சில்வா, கடந்த சில வாரங்களாக, வெளிநாட்டுப் பிரிவினர் மக்களை ஏமாற்றி பரிசுப் பொருட்களை காட்டி மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் நிரம்பி வழிகின்றன.
அதன்படி, பலர் தெரியாத வங்கிக் கணக்குகள் மூலம் 50,000-75,000 அல்லது 100,000 ரூபாய் வரை பணப் பரிமாற்றம் செய்துள்ளனர் என்றார்.
கடந்த காலங்களில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றதாகவும், சமூக ஊடகங்களில் இணையத்தளத்தில் பணம் செலுத்தும் வசதிகளுடன் கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிராமவாசிகள் பலர் கூட இந்த மோசடிகளுக்கு பலியாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.