புதிய முதலீட்டுச் சட்டம் உருவாக்கப்படும் – திலும் அமுனுகம!
அனைத்து முதலீடுகளையும் உள்ளடக்கும் வகையில் புதிய முதலீட்டுச் சட்டம் தயாரிக்கப்படும் என பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் அடுத்த வருடம் முதல் புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் இன்று (20.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கைத்தொழில் பூங்காவில் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு தேவையான அனுமதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை, காணி ஒதுக்கீட்டுக் கட்டணக் குறைப்பு போன்ற சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் நிறுவனங்களுக்கு முன்மொழியும் போது முதலீட்டாளர்கள் 100மூ உரிமைகள் முதலீட்டாளரிடம் இருக்கும் வகையில் திருத்தப்பட்ட புதிய சட்டங்களை அமல்படுத்துவார்கள் என்று முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.