புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி! மருத்துவர்கள் விசேட அறிவுறுத்தல்
கடந்த ஜூன் 14-ம் திகதி அதிகாலை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் நீதிமன்ற காவலில் நேற்று புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை முழுமையாக குணமடையாததால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பழங்களை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், மருத்துவ அடிப்படையில் பழங்களை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல் வகுப்பு சிறையில் அடைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, படுக்கை, தலையணை, மின் விசிறி, மேஜை, நாற்காலி, புத்தகங்கள், தனி கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
அதன்படி சிறையில் வழக்கமான உணவுடன் சப்பாத்தியும் வழங்கப்படும், வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி வழங்கப்படுகிறது, 3 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் பால் மற்றும் தேநீரின் அளவு அதிகரிக்கப்படும்,
சிறையில் உள்ள கைதிகள் சீருடைக்கு பதிலாக சாதாரண உடைகளை அணியலாம், அறை அளவு சற்று பெரியது; மின்விசிறி, கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, கொசுவலை, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி போன்ற வசதிகள் உள்ளன.
சிறைக் கண்காணிப்பாளர் அனுமதித்தால், சிறைக்குள் இருக்கும் பாத்திரங்களுக்குப் பதிலாக வெளியில் இருந்து வரும் ஹாட்பாக்ஸ், பிளேட்டைப் பயன்படுத்தலாம், சிறை வளாகத்தில் இயங்கும் கேன்டீனில் ரூ.1,000 மதிப்புள்ள பொருட்களை வாங்க அனுமதி, முதலாம் வகுப்பு கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும், மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள பிரத்யேக மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்