எப்போதும் இளமையாக இருக்க இலகுவாக வழிமுறைகள்!
மது அருந்துவதால் ஒரு புறம் தீங்கு நடந்தாலும், ஒரு புறம் நன்மைகளும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ரெட் ஒயின் குடிப்பதால் மனிதர்களுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. அது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
* உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியதில் இந்த ரெட் ஒயின் என்ற மதுபானமும் ஒன்று. அப்படிப்பட்ட இந்த ஒயினை அளவாக குடிக்கும்போது அது உடலுக்கு நல்ல பயனை அளிக்கிறது. ஒயினை உள்ளுக்கு எடுத்துக்கொள்வதன் மூலம் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு நல்ல பயனை கொடுக்கிறது.
* இதனை பெண்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு தேவையான ஊட்டத்தை கொடுத்து தோல்களுக்கு நல்ல பொலிவைத் தருகிறது. இதயநோய், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக வலுவைக் கொடுத்து அவர்களை பாதுகாக்கிறது.
* ரெட் ஒயினில் அதிக அளவு ஆன்டிஆக்சிடன்கள் காணப்படுவதால் இவை புற்றுநோயை தடுக்கும் வல்லமை உடையதாக காணப்படுகிறது. ரெட் ஒயினில் குறைந்த அளவே கலோரிகள் காணப்படுவதால் இது உடலின் எடையை அதிகரிக்காது.
* உடல் எடை குறைக்க விரும்புவோர் இதனை அருந்துவது நல்ல பயனை கொடுக்கும். தூக்கமின்மையானால் அவதிப்படுவோர் இந்த ரெட் ஒயினை பயன்படுத்துவதன் மூலம் நல்ல தூக்கம் வரும். ஏனென்றால் ரெட் ஒயினில் தூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மெலடோன் எனப்படும் உட்பொருள் காணப்படுகிறது.
* பெண்களுக்கு தோல்களின் தன்மையை பாதுகாத்து சருமப் பொலிவைத் தருகிறது இந்த ரெட் ஒயின். முதுமையைத் தடுத்து இளமையைத் தக்கவைக்கும் தன்மையும் உள்ளது.
* இந்த ரெட் ஒயின் கண்நோய், சிறுநீரக கோளாறுகள், இதய பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்வதற்கு இந்த ரெட் ஒயின் ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது. இப்படி பல நோய்களுக்குத் தீர்வாக இந்த ரெட் ஒயின் அமைந்துள்ளது.