பிரான்ஸில் விடுமுறையின் போது அமுலாகும் தடை
பிரான்ஸில் வாணவேடிக்கையின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 14ஆம் திகதி தேசிய விடுமுறையின்போது இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அன்று அவற்றை வழங்கவோ வைத்திருக்கவோ கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.
அங்குப் பதின்ம வயது இளையர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதால் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. அந்த ஆர்ப்பாட்டங்களில் வாணவேடிக்கைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
பொது ஒழுங்குமுறை பாதிக்கப்படுவதைத் தவிர்க்க ஜுலை 14ஆம் திகதியும் 15ஆம் திகதியும் வாணவேடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த இரு நாள்களும் பிரான்சின் தேசிய நாளாகக் (Bastille Day) கருதப்படுகின்றன.
தேசிய நாள் கொண்டாட்டங்களில் வாணவேடிக்கையை வழக்கம்போல் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
(Visited 14 times, 1 visits today)