மீண்டும் டைட்டானிக் கப்பலை பார்வையிட திட்டமிடும் OceanGate நிறுவனம்
டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காண ஆட்களை ஏற்றிச் சென்ற டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகி 10 நாட்கள் கடந்துவிட்டன.
அட்லாண்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் டைட்டானிக் அருகே வெடித்து சிதறிய நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவும் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
மனித உடல்களின் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இத்தகைய பின்னணியில் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலை இயக்கிய OceanGate நிறுவனம், டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்க்க மக்களை அழைத்துச் செல்லும் பயணங்களை இன்னும் தனது இணையதளத்தில் விளம்பரப்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு ஜூன் 12 முதல் ஜூன் 20 வரையிலும் ஜூன் 21 முதல் ஜூன் 29 வரையிலும் 250,000 டொலர் செலவில் டைட்டானிக் கப்பலை பார்வையிட இரண்டு பயணங்களை நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணத்திற்கான செலவில் டைவிங், தனியார் தங்குமிடம், தேவையான அனைத்து பயிற்சிகள், பயண உபகரணங்கள் மற்றும் கப்பலில் இருக்கும் போது அனைத்து உணவுகளும் ஈடுசெய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, ஒரு சுற்றுலாப்பயணியின் செலவு 250,000 அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.