ஆஸ்திரேலியா விளையாட்டு

முன்றாம் நாள் முடிவில் 221 ஓட்டங்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா அணி

ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது.

நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், ஹாரி புருக் 45 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னிலும் 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து ஹாரி புரூக் அரை சதம் அடித்து வெளியேறினார். பேர்ஸ்டோவ் 16, பிராட் 12, ராபின்சன் 9, ஜோஷ் டங் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 91 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது.

டேவிட் வார்னர் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். லாபுசேன் 30 ரன்னில் வெளியேறினார். உஸ்மான் கவாஜா அரை சதமடித்தார்.

மழை குறுக்கிட்டதால் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.

கவாஜா 58 ரன்னுடன் களத்தில் உள்ளார். இதனால் ஆஸ்திரேலியா 221 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

KP

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!