பிரபல பாப் பாடகி மடோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
பிரபல அமெரிக்க பாப் பாடகி மடோனா பாக்டீரியா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செரிஷ் என்ற படத்தில் நடித்தபோது மடோனாவுக்கு கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது மேலாளர் கை ஒசிரி தெரிவித்துள்ளதாவது,

“மடோனாவுக்கு கடந்த 25ஆம் திகதி தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் பல நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தங்க வைக்கப்பட்டார். தற்போது மடோனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் வான்கூவரில் ஜூலை 15ஆம் திகதி தொடங்கவிருந்த அவரது சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பயண திகதி பின்னர் அறிவிக்கப்படும்,” என்றார்.
(Visited 13 times, 1 visits today)





