இலங்கை செய்தி

யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் போது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பாழடைந்த கட்டடத்தில் மறைத்து விடப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் சிவன் கோவிலில் வழிபடச் சென்றவர் வீதியோரமாக மோட்டார் சைக்கிளை தரித்துவிட்டுள்ளார். தலைக் கவசத்தையும் விட்டுச்சென்றுள்ளார்.

வழிபாடு முடித்து வீடு திரும்ப முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பொலிஸார் பண்டதரிப்பை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

பாழடைந்த கட்டடத்துக்குள் மறைத்து விடப்பட்டிருந்த திருடிய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கடந்த மாதம் யாழ்ப்பாணம் மாநகரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பளை, கொடிகாமம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுடனும் சந்தேக நபருக்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.

மேலதிக விசாரணைகளின் பின் சந்தேக நபர் இன்றையதினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை