ரஷ்யாவை உலகளாவிய குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பு
ஐக்கிய நாடுகள் சபை ரஷ்யாவை உலகளாவிய குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
2022ல் உக்ரைனில் 136 குழந்தைகளைக் கொன்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) ஒரு தூதரக அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையின்படி, உக்ரைனில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது ரஷ்ய படைகள் மற்றும் நட்பு குழுக்கள் 480 தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அந்தத் தாக்குதல்களில் 518 குழந்தைகள் ஊனமுற்றுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் 91 குழந்தைகளை மனித கேடயமாக பயன்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யா-உக்ரைன் போரில் ஏறக்குறைய 1,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று UNICEF தெரிவித்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)