ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு இரண்டாவது முறையாக பொதுவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மசூதியின் மைதானத்தில் வைத்து குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“லாக்மான் மாகாணத்தின் மையமான சுல்தான் காசி பாபா நகரில் அவர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டார், எனவும் அவரின் கொடுமையான மரணம் மற்றவர்களுக்கு பாடமாக அமையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





