இந்தியா தமிழ்நாடு

காதலை நிராகரித்ததால் 23 வயது பெண்ணின் கழுத்தை நெரித்துக்கொன்ற 17 வயது சிறுவன்!

தருமபுரி நகராட்சி 8வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வர், இவரது 23 வயதான மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுதியில் தங்கி பணிக்கு சென்றுவந்த அவர் அதியமான் கோட்டை வனப்பகுதியில் சடலமாகக் கிடந்தார். இது தொடர்பாக அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்,

ஹர்ஷா கடைசியாக ஒரு 17 வயது சிறுவனுடன் செல்போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிறுவனிடம் விசாரணை நடத்திய பொலிஸாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. ஹர்ஷாவின் தம்பியும் அவரும் கல்லூரியில் நண்பர்களாக இருந்துள்ளனர். பிளஸ் 2 முடித்ததும் சிறுவனுக்கும் ஹர்ஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

அப்போது, ஹர்ஷா ஓசூரில் வேலை கிடைத்ததும் அங்கு சென்றுவிட்டார். ஹர்ஷாவுக்கு வேலை கிடைத்ததும் குடும்பத்தினர் அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்தநிலையில் ஹர்ஷாவும் சிறுவனுடன் பேசுவதை குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிறுவன் ஹர்ஷாவை நேரில் சந்திக்க விரும்பியதால் அவர் கடந்த 6ம் திகதி தருமபுரிக்கு வந்துள்ளார். அங்கிருந்து இருவரும் பைக்கில் நரசிங்கபுரம் கோம்பைக்கு சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஹர்ஷா தனக்குத் திருமண ஏற்பாடு நடப்பதைப் பற்றித் தெரிவித்துள்ளார். மேலும், சிறுவனின் வயதைக் காரணம் காட்டி, தன்னை மறந்துவிடுமாறு கெஞ்சி உள்ளார். அதை ஏற்காத சிறுவனுக்கும் ஹர்ஷாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கோபம் அடைந்த சிறுவன் ஹர்ஷாவின் துப்பட்டாவைப் பறித்து அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின், ஹர்ஷாவின் உடலை பாறை மறைவில் ஒளித்து வைத்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.

இந்த வாக்குமூலத்தை அடுத்து பொலிஸார் சிறுவனை தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!