உலகின் 95 சதவீதமான வளங்கள் 01 சதவீத செல்வந்தர்களின் வசம் – அதிக வரி விதிக்க அழைப்பு!
பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கக் கோரி எழுதப்பட்டுள்ள ஒரு திறந்த கடிதத்தில் ஏறக்குறைய 400 பணக்காரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நடிகர் மார்க் ருஃபாலோ ( Mark Ruffalo) மற்றும் இசைக்கலைஞர் பிரையன் எனோ (Brian Eno) உள்ளிட்ட உயர்மட்ட நபர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
உலகில் 95 சதவீதத்திற்கும் அதிகமான சொத்துக்களை 1 சதவீத பணக்காரர்கள் சொந்தமாக வைத்திருக்கிறார்கள் என்று அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே செல்வந்தர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இடையில் விரிவடைந்து வரும் ஏற்றத்தாழ்வை குறைக்குமாறு இக்கடிதம் பரிந்துரைத்துள்ளது.
அதிக செல்வம் கொண்ட ஒரு சில உலகளாவிய தன்னலக்குழுக்கள் நமது ஜனநாயகங்களை விலைக்கு வாங்கினர், நமது அரசாங்கங்களைக் கைப்பற்றினர், நமது ஊடக சுதந்திரத்தை முடக்கினர், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் மீது பிடியை வைத்தனர், வறுமை மற்றும் சமூக விலக்குகளை ஆழப்படுத்தினர், மேலும் நமது கிரகத்தின் சிதைவை துரிதப்படுத்தினர், என்று அவ் அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.





