ஸ்பெயின் ரயில் விபத்து – இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடல்கள்!! மீட்கமுடியாமல் தவிப்பு!
ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் காணாமல்போனவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட பெட்டிகளை அணுக கிரேன்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் குறைந்தது மூன்று உடல்கள் இன்னும் சிக்கியிருப்பதாக உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா (Fernando Grande-Marlaska) குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி





