4 வருடங்களுக்கு பிறகு முதலிடத்துக்கு முன்னேறிய Virat Kohli
சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC ஒருநாள் ODI போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் விராட் கோஹ்லி Virat Kohli முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் ODI , டி20 T- 20, டெஸ்ட் Test தொடருக்கான தரவரிசைப் பட்டியலை வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடுகின்றது.
இதற்கமைய இவ்வாரத்துக்குரிய ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ODI போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் விராட் கோஹ்லி, 4 ஆண்டுகளுக்கு முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து தொடருக்கான முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி அவர் 93 ஓட்டங்களைப் பெற்றார். இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது.
ODI கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் முதல் 10 இடங்களில் உள்ள வீரர்கள் விபரம்
வருமாறு,
விராட் கோஹ்லி – 785 புள்ளிகள்
டேரில் மிட்செல் – 784 புள்ளிகள்
ரோஹித் சர்மா – 775 புள்ளிகள்
இப்ராஹிம் ஜத்ரன் – 764 புள்ளிகள்
ப்மன் கில் – 725 புள்ளிகள்
பாபர் அசாம் – 722 புள்ளிகள்
ஹாரி டெக்கர் – 708 புள்ளிகள்
ஷாய் ஹோப் – 701 புள்ளிகள்
சரித் அசலங்க – 690 புள்ளிகள்
ஷ்ரேயஸ் ஐயர் – 682 புள்ளிகள்






