ஜெயிலர் – 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி?
இயக்குநர் நெல்சன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகின்றது.
இந்தபாகத்திலும், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயிலர் – 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், கோவாவில் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை, சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் அரசன் படத்திலும் விஜய் சேதுபதி இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






