அரசியல் இலங்கை

இனவாதத்துக்கு சமாதி கட்டுமாறு சஜித் வலியுறுத்து

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மதவாதம மற்றும் இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக உடனடியாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளனர்.

“ அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

இனங்கள், மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த பழமைவாதக் கருத்துக்களுக்கு அப்பால் சென்ற தனித்துவமான பணி எம்முன்னால் காணப்படுகின்றது .” எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

நமது நாட்டிற்கு தேசிய மற்றும் மத ஒற்றுமை முக்கியமானதாக அமைந்து காணப்படுகின்றன. அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்கு சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை போஷித்து வருவது போலவே பிற மதங்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பும், உரிய ஸ்தானமும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இது இவ்வாறு நடக்கும் பட்சத்தில் மத ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் மேலோங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

சங்கைக்குரிய பேராசிரியர் பல்லேகந்த ரத்தினசார மகாநாயக்க தேரருக்கு இலங்கை அமரபுர மகா பீடத்தின் வஜிரவங்ச பிரிவின் மகாநாயக்கர் பதவிக்கான ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!