உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு – முறையான விசாரணைக்கு அழைப்பு!
உயர்தரப் பரீட்சைகளில் சில கேள்விகள் கசிந்துள்ளதா என்பதை அறிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நுகேகொடையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்விபயிலும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாள் கேள்விகளும், உயர்தரப் பொருளாதார வினாத்தாள் கேள்விகளும் ஒரே மாதிரியாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
“இது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





