வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட ராஜமௌலி ! பொலிஸில் முறைப்பாடு
மகேஷ் பாபுவின் 25வது படமான வாரணாசி படத்தை டோலிவூட்டின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகிறார்.
படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிருத்விராஜ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் 2027 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படத்தின் அறிமுக டீசர் அண்மையில் ஐதராபாத்தில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.
அந்த நிகழ்வில் பேசிய ராஜமௌலி, “எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா கூறுவார் “அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார்” என்று.. ஆனால், அதை கேட்டு நினைத்து எனக்கு கோபம் வந்தது.
என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. அவர் மீதும் கோபம் வருகிறது என்றார்.
இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அனுமனை வமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக ‘ராஷ்ட்ரிய வானரசேனா’ என்ற அமைப்பு ராஜமௌலி மீது ஐதராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
வாரணாசி பட விழாவில் ராஜமௌலியின் கருத்து இந்துக்களின் உணர்வுகளை கடுமையாக புண்படுத்தியதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.






