தலைவர் 173 திரைப்படத்தை இயக்கப் போவது இவரா? மாஸ் கூட்டணி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவர் 173’ படம் எந்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதோ தெரியவில்லை ஆரம்பமே கோணலாகி விட்டது.
இயக்குனராக இருந்த சுந்தர் சி இப்படத்திலிருந்து திடீரென விலகிவிட்டார். இதனால் அப்படத்திற்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சுந்தர் சி-யை அடுத்து இந்த பிரம்மாண்ட படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாகவும், கடும் போட்டியாகவும் இருந்தது.
இந்த நிலையில் அதுபற்றிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதாவது, ‘தலைவர் 173’ படத்தை இயக்க தனுஷுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தயாரிப்பு நிறுவனமோ அல்லது சம்பந்தப்பட்ட நடிகர்களோ இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனினும், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என செம பிசியாக இருக்கும் தனுஷ், தலைவர் 173 பட வாய்ப்பை தட்டிதூக்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






